Sunday 3 March 2013

ரிச் லுக் தரும்" காப்பி பெயின்டிங்"(coffee painting)

                  விதவிதமான  வண்ண ஓவியங்களைவிட  ரிச் லுக் த்ருகிறது காப்பி பெயின்டிங்.சாதாரண இன்ஸ்டன்ட் காப்பிதூள் கொண்டு 4,5 விதமான
கோல்டன் பிரவுன்  ஷெடுகளை உருவாக்கி வரைவதுதான் இந்த பெயின்டிங்.
நான் நரசூஸ் இன்ஸ்டன்ட் பயன்படுதிவுள்ளேன். முதலில் வரைபவர்கள் சாதாரண பேப்பரில் ஏதாவது வரைந்து பெயின்ட் செய்து பார்த்த பின் கேன்வாஷ் சீட்டில் வரையவும்.
                                         
                                             தேவையானவை:
                                      *  இன்ஸ்டன்ட் காப்பிதூள்
                                       *கேன்வாஷ் சீட்
                                       * காப்பர் கலர் 3-டி அவுட் லைனர்
                                       * பிரஷ்
                                        * பிக்சர் வார்னிஷ்
                                       * எல்லோ கார்பன்

                  முதலில் தேவையான படத்தை கார்பன் வைத்து கேன்வாஷ் சீட்டில் வரைந்தபின்பு அதன் மேல் 3-டி லைனரால் வரைந்து கொள்ள வேண்டும். பின்பு 4 சிறிய கிண்ணங்கள் ஒவ்வொன்றிலும் அரை ஸ்பூன்
இன்ஸ்டன்ட் காப்பிதூள் எடுத்துக்கொண்டு  அதில் சிலதுளிகள் தண்ணீரை
விட்டுக் குழைத்துக் கொள்ளவும். தண்ணீர்  துளிகள் சேர்க்கும்  அளவைப்
பொருத்து  விதவிதமான திக்கான மற்றும் லைட்டான  நிறங்களைப் பெறலாம். லைனர் நன்கு காய்ந்த பின்பு அழகாகப் பெயின்ட் செய்யவும்.
ஒருநாள் முழுவதும் நன்கு காய்ந்தபின் படத்தின் மேல் வார்னிஷ் அடிக்கவும்.
வார்னிஷ்-க்கு  பதிலாக  glue and gloss-ம் பயன்படுத்தலாம். 3-டி லைனர் இல்லாமல் வரைந்துள்ளேன். கிரீடம் நகைக்கு  மட்டும் 3-டி கோல்டு கலர்
 லைனர் பயன்படுத்தியுள்ளேன். படம் நன்றாக காய்ந்த பின் ப்ரேம் செய்யவும்.
                    
                                        

No comments:

Post a Comment

கருத்துகள் வரவேற்கப்படுகிறது.